ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் ஸ்டிராஸ் அபார சதம்




ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில், கேப்டன் ஸ்டிராஸ் சதமடித்து அசத்த, இங்கிலாந்து அணி தேநீர் இடைவேளையின் போது இரண்டு விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்திருந்தது.இங்கிலாந்து சென்றுள்ள ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, வரலாற்று சிறப்புமிக்க ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட, ஆஷஸ் தொடரில் பங்கேற் கிறது. கார்டிப்பில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று துவங்கியது. \"டாஸ்\' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில், முதல் டெஸ்டில் விளையாடிய சுழற்பந்துவீச்சாளர் மான்டி பனேசருக்கு பதில், கிரகாம் ஆனியன்ஸ் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிராஸ் மற்றும் குக் சூப்பர் துவக்கம் கொடுத்தனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சை பதம் பார்த்த இந்த ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. பீல்டிங்கில் ஏமாற்றிய ஆஸ்திரேலிய அணி ரன்களை வாரி வழங்கியது. முதல் விக்கெட்டுக்கு 196 ரன்கள் சேர்த்த நிலையில் குக் (95), சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். அடுத்து வந்த ரவி போபரா (18) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பின்னர் அபார மாக ஆடிய ஸ்டிராஸ் டெஸ்ட் அரங்கில் 18வது சதமடித்தார்.

இங்கிலாந்து அணி தேநீர் இடை வேளை யின் போது 2 விக்கெட் இழப் புக்கு 255 ரன்கள் எடுத்தி ருந்தது. ஸ்டிராஸ் (100), பீட்டர்சன் (22) அவுட்டாகாமல் இருந்தனர்.லார்ட்ஸ் டெஸ்டில் அம்பயராக செயல்படும் தென் ஆப்ரிக்காவின் ருடி கோயர்ட்சன், தனது 100வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்றிய இரண்டாவது நபர் என்ற பெருமை பெற்றார். முதலிடத்தில் வெஸ்ட் இண்டீசின் ஸ்டீவ் பக்னர் (128 போட்டி) உள்ளார். தவிர, ஒருநாள் கிரிக்கெட் அரங்கில், அதிகபோட்டிகளில் (201) அம்பயராக பணியாற்றிய ஒரே நபரும் கோயர்ட்சன் தான்.

0 Responses

Post a Comment