சாதனைகள் படைக்கும் போட்டியாக அமைத்த முதல் டெஸ்ட் போட்டி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிகளில் இரு அணி வீரர்களும் சாதனைகளை படைப்பதற்கு களம் அமைத்து கொடுத்த போட்டியாக நாம் இதனை கருதலாம். காரணம் இதில் பல சாதனைகளை இரு அணி வீரர்களும் படைத்துள்ளனர் அதாவது,

அஹமதாபாத்தில் நடைப்பெற்று வரும் இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ராகுல் டிராவிட் 177 ஓட்டங்களை பெற்றதன் மூலம் 11000 ஓட்டங்களை கடந்துள்ளார். 135வது டெஸ்ட் போட்டியில் 234 வது இனிங்சில் விளையாடும் டிராவிட் சச்சின் டெண்டுல்கர், ஆலன் போர்டர், பிரைன் லாரா, பொன்டிங் ஆகியோருக்கு அடுத்ப்படியாக இவர் உள்ளார். இதன் மூலம் 27 சதங்களையும், 57 அரைச் சதங்களையும் பெற்றுள்ளார்.


திலகரட்ன தில்சான் 112 ஓட்டங்களை பெற்றதன் மூலம் டெஸ்ட் போட்டியில் தனது 10வது சதத்தை பூர்த்தி செய்தார். மேலும் இந்த ஆண்டில் இவர் பெறும் 5வது சதம் இதுவென்பதோடு இந்தியாவுக்கு எதிராக இவர் பெறும் முதலாவது சதம் இதுவாகும்.

இந்தியாவின் முதலாவது இனிங்சில் 6வது விக்கெட்டுக்காக இனைந்து கொண்ட தோனி 110 ஓட்டங்களுடனும், 111 ஓட்டங்களுடன் 224 ஓட்டங்களை இனைப்பாட்டமாக பெற்றனர். மேலும் இலங்கையின் 2வது இனிங்சில் 4வது விக்கெட்டுக்காக இனைந்து கொண்ட சமரவீர 70 ஓட்டங்களும், ஜேவர்த்தன 57 ஓட்டங்களும் பெற்றதன் மூலம் இனைப்பாட்டமாக 138 ஓட்டங்களை பெற்றனர்.


இருப்பினும் இதனை விடவும் சாதனை படைக்கும் இனைப்பாட்மாக பிரசன்ன - மகேலவின் இணைப்பாட்டம் (351 ) ஓட்டங்கள் காணப்படுகின்றது. பிரட்மனும், பிங்கில்டனும் 72 வருட காலம் தன் வசம் வைத்திருந்த இனைப்பாட்ட சாதனைi வரலாற்றை, 6வது விக்கெட்டுக்கான இனைந்துக் கொண்ட இவ் இரு வீரர்களும் அதனை முறியடித்துள்ளனர். இதுமட்டுமன்றி இந்த இணைப்பாட்டம் எந்த ஒரு அணியினாலும் இந்திய அணிக்கேதிராகப் பெறப்பட்ட மூன்றாவது பெரிய இணைப்பாட்டமாகும்.

இலங்கை அணி 2 வது இனிங்சில் துடுப்பெடுத்தாடி பெற்ற மொத்த ஓட்ட எண்ணிக்கையானது இந்திய மண்ணில் பெறப்பட்ட மிகக் கூடுதலான ஓட்ட எண்ணிக்கையாகும் இதற்கு முன் இந்திய அணி 23 வருடங்களுக்கு முன் இலங்கை அணிக்கெதிராக 676 ஓட்டங்களைக் குவித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. அத்துடன் இலங்கை அணியினால் வெளிநாடொன்றில் பெறப்பட்ட மிக கூடுதலான ஓட்ட எண்ணிக்கையும் இதுவென்பது குறிப்பிடதக்கது.



முதலாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தின் போது சச்சின் டெண்டுல்கர் தனது 35 ஓட்டங்களை கடந்த போது, சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் 30,000 ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற புதிய சாதனையை நிலைநாட்டினார். 160 டெஸ்ட் போட்டிகள், 436 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின், இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 12,812 ஓட்டங்களும், ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 17,178 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

முதலாவது டெஸ்ட் போட்டியிலேயே இவ்வாறான பல சாதனைகள் படைத்த வீரர்கள் இன்னும் இரு போட்டிகளில் பல சாதனைகளை படைப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இன்றைய போட்டியில்... இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 412 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து போட்டியை வெற்றி தோல்வியின்றி நிறைவு செய்தது.

துடுப்பாட்டத்தில், கௌதம் கம்பீர் 114 ஓட்டங்களும், N~வாக் 51 ஓட்டங்களும் , ராகுல் ட்ராவிட் 38 ஓட்டங்களும், மி~;ரா ,24 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆட்டமிழக்காது சச்சின் டெண்டுல்கர் 100 ஓட்டங்களும், லகஸ்மன் 51 ஓட்டங்களும் பெற்றிருந்தனர்.


சச்சின் டெண்டுல்கர் இன்றைய நாள் ஆட்டத்தில் தனது 35 ஓட்டங்களை கடந்த போது, சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் 30,000 ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற புதிய சாதனையை நிலைநாட்டினார். 160 டெஸ்ட் போட்டிகள், 436 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின், இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 12,812 ஓட்டங்களும், ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 17,178 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

இந்தியா தனது முதல் இன்னிங்ஸிற்காக 426 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 760 ஓட்டங்களையும் பெற்ற போது ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. இதனையடுத்து இன்று 5வது நாள் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி போட்டியை சமநிலையில் நிறைவு செய்தது.
0 Responses

Post a Comment