விதிகளை மீறும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் : அரசு தலையிட வலியுறுத்தல்


வீரர்கள் விதிகளை மீறுவதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு (டபிள்யு. ஐ.சி.பி.,) தெரிவித்துள்ளது. பிரச்னையை தீர்த்து வைக்க அரசு தலையிட வேண்டும் என வீரர்கள் சங்கம், அந்நாட்டுஅதிபருக்கு கடிதம் எழுதியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சம்பள ஒப்பந்த பிரச்னை நீண்ட காலமாக நீடித்து வருகிறது.

சமீபத்தில் வீரர்கள் சங்கம், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டுடன் நடந்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் வங்கதேசத்திற்கு எதிரான தொடரை கிறிஸ் கெய்ல், சந்தர்பால், சர்வான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் புறக்கணித்தனர். இரண்டாம் நிலை வீரர்களுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்று வரும் வெஸ்ட் இண்டீசை முதல் டெஸ்டில் வென்ற வங்கதேசம், இரண்டாம்டெஸ்டிலும் வென்று தொடரை கைப்பற்ற தயாராக உள்ளது.டபிள்யு. ஐ.சி.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில், \"\"வீரர்கள் வங்க தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்க மறுத்தனர். வரும் 2010 \"டுவென்டி-20\' உலககோப்பை தொடர் டிக்கெட் அறிமுக விழாவிலும் கலந்து கொள்ளவில்லை. இது கிரிக்கெட் போர்டின் விதிகளை மீறுவதாக உள்ளது. இதுகுறித்து 10 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு ஒவ்வொரு வீரருக்கும் கடிதம் எழுதியுள்ளோம்,\'\' என கூறியுள்ளது.சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான தொடர்களில் பங் கேற்ற வீரர்களுக்கான சம்பளம் குறித்து டபிள்யு.ஐ.சி.பி., துணைத் தலைவர் டேவ் காமரூன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,\"\" வீரர்களுடன் கலந்துபேசி எந்த முடிவும் எடுக்கவில்லை.

இப்போதுவரை பழைய நிலையே தொடர்கிறது. இருந்த போதிலும் அவர்கள் பணிக்கு தகுந்து நாங்கள் சம்பளம் தருகிறோம்.இப்போது இங்கிலாந்து, இந்தியதொடருக்குரிய சம்பளத்தை தர இருக்கிறோம். வீரர்கள் விரைவில் இதனை பெற்றுக்கொள்ளலாம், என்றார்.இதுகுறித்து வீரர்கள் சங்கத்தின் தலைவர் ராம்நரைன் கூறுகையில், முதல் டெஸ்டில் பங்கேற்க முடியாதது குறித்து வீரர்கள் சார்பில்ஏற்கனவே தெரிவித்துள்ளோம். டபிள்யு.ஐ.சி.பி., உடன் எந்தவித ஒப்பந்தமும் இல்லாத நிலையில் வீரர்களை எந்த விதிகளும், நிர்ப்பந்தமும் கட்டுப்படுத்தாது. இதுகுறித்து கயானா ஜனாதிபதி மற்றும் கரீபியன் கூட்டமைப்பு அரசின் தலைவர் பாரத் ஜக்டியோவுக்கு கடிதம் எழுதியுள்ளோம். அரசு தலையிட்டு நெருக்கடியை தீர்த்து வைக்கும் என வீரர்கள் நம்புகிறார்கள், என்றார்.ஐ.சி.சி., சமரசம்?\"\"டபிள்யு.ஐ.சி.பி., வீரர்கள் பிரச்னையில் உடனயாக தீர்வு காணும் என தெரியவில்லை. இதுதான் கவலையாக உள்ளது. ஏனெனில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குஎங்களுக்கு வலிமையான அணி தேவை. டபிள்யு.ஐ.சி.பி., எங்களை தொடர்புகொண்டால் இந்த பிரச்னையை தீர்த்து வைக்க முயற்சிப்போம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அறிவித்துள்ளது.
0 Responses

Post a Comment