லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் பவுலிங் அபாரம்


லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன்பவுலிங்கில் அசத்த, ஆஸ்திரேலிய அணி 31 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்துதிணறல் துவக்கம் கண்டது. இங்கிலாந்து சென்றுள்ள ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, வரலாற்று சிறப்புமிக்க ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட, ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது.

கார்டிப்பில் நடந்த முதல் டெஸ்ட் \"டிராவில்\' முடிந்தது. இரண்டாவது டெஸ்ட்லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. \"டாஸ்\' வென்று முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஸ்டிராஸ் (161), பிராட் (7) அவுட்டாகாமல் இருந்தனர். நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது.முதல் இன்னிங்சை தொடர்ந்த ஸ்டிராஸ் (161), பிராட் (16) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பி ஏமாற்றினர்.

அடுத்து வந்த சுவான் (4) நீண்டநேரம் நிலைக்கவில்லை. பின்னர் இணைந்த ஆண்டர்சன், ஆனியன்ஸ் ஜோடி ஓரளவு ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடி 10வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்த போது ஆண்டர்சன் (29) அவுட்டானார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 425ரன்களுக்கு ஆல்-அவுட்டானாது. ஆனியன்ஸ் (17) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியாசார்பில் ஹில் பென்ஹாஸ் 4, ஜான்சன் 3, பீட்டர் சிடில் 2 விக்கெட் வீழ்த்தினர். மழை குறுக்கீடு: பின்னர் முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஹியுஸ் (4), கேப்டன் பாண்டிங் (2) இருவரும் வந்த வேகத்தில் ஆண்டர்சன் பந்தில் வெளியேறி ஏமாற்றினர். ஆஸ்திரேலிய அணி 16 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 31ரன்கள் எடுத்து திணறியபோது, மழை குறுக்கிட ஆட்டம்ஒத்திவைக்கப்பட்டது. காடிச்(12), மைக்கேல் ஹசி (9) அவுட்டாகாமல் இருந்தனர்.
0 Responses

Post a Comment