
இந்திய கிரிக்கெட் வீரர்களான சச்சின், காம்ப்ளி இருவரும் ஒரே மேடையில் தோன்றி, தங்களது நட்பை புதுப்பித்துக் கொண்டனர்.
மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், காம்ப்ளி இருவரும் நீண்ட கால நண்பர்கள். தொடர்ந்து 26 ஆண்டுகளாக இவர்களது நட்பு தொடர்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், தனியார் \"டிவி\' நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காம்ப்ளி, \" கிரிக்கெட் அரங்கில் தான் வீழ்ச்சிப் பாதையில் பயணித்த போது, சச்சின் எனக்கு உதவ வில்லை\' என, தெரிவித்தார். இதனால் சர்ச்சை வெடித்தது. உடனடியாக இதை மறுத்த காம்ப்ளி, தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். தவிர, தான் சச்சினுக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்க வில்லை என்றார். இப்பிரச்னை மீடியாவில் பெரிய அளவில் பரபரப்பான சமயத்தில், சச்சின் லண்டனில் இருந்தார்.
தற்போது இந்தியா திரும்பியுள்ள சச்சினை, காம்ப்ளி சந்தித்தார். தவிர, இருவரும் இணைந்து நாக்பூரில் நடந்த அவர்களது பயிற்சியாளர் ராமகன்ட் அச்ரேகருக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டனர். இருவரும் ஒரே மேடையில் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்தனர். இதன் மூலம் இப்பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. காம்ப்ளியின் பேட்டி குறித்து, கருத்து தெரிவிக்க சச்சின் மறுத்து விட்டார்.
Post a Comment